PAK vs NZ: பாகிஸ்தான் டி20 அணியில் முகமது அமீர், இமாத் வசிம், உஸ்மான் கானுக்கு இடம்!
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தால் தடைசெய்யப்பட்ட உஸ்மான் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Trending
இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தால் தடைசெய்யப்பட்ட உஸ்மான் கானுக்கு பாகிஸ்தான் டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீகரத்திற்காக கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்த உஸ்மான் கான், நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றதுடன் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஆனால் அதன்பின் இத்தொடர் முடிவடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகும் நிலையில் உஸ்மான் கான் அமீரகத்திற்கு செல்லவில்லை. மேலும் அவர் பாகிஸ்தானிலேயே தங்கி, பாகிஸ்தான் தேசிய அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து உஸ்மான் கான் குறித்து, அமீரக கிரிக்கெட் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அப்போது, உஸ்மான் கான் பாகிஸ்தானுக்கு விளையாட விரும்புவது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் அமீரக கிரிக்கெட் வாரியத்தால் 5 ஆண்டுகள் விளையாட தடைவிதிக்கப்பட்டார். இதனால் அவரால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உஸ்மான் கானை தங்களது அணியில் சேர்த்ததுடன், நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலும் வாய்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு இது சர்வதேச கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தனது கேப்டன்சியிலிருந்து விலகிய பாபர் அசாம், இத்தொடரில் மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மேலும் முன்னாள் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், இஃப்திகார் அஹ்மத், நசீம் ஷா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை திரும்பப்பெற்ற முகமது அமீர் மற்றும் இமாத் வசிம் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் டி20 அணி: பாபர் ஆசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசாம் கான், ஃபகார் ஸமான், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், இர்ஃபான் கான் நியாசி, நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரிடி, உசாமா மிர், உஸ்மான் கான், ஸமான் கான்.
Win Big, Make Your Cricket Tales Now