
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியானது 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிசெய்து அசத்தியது.
இதன்மூலாம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வென்றதுடன், இந்திய அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்திற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பானது தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 147 ரன்கள் என்ற இலக்கை விட்டிய இந்திய அணி இப்போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அச்சமயத்தில் ரிஷப் பந்த் மட்டும் தானி ஆளாக அபாரமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதில் அவர், 64 ரன்கள் எடுத்திருந்த போது அஜாஸ் படேல் பந்துவீச்சில் டாம் பிளெண்டலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஆனால் இதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. அதன்பின் நியூசிலாந்து அணி வீரர்கள் ரிவிவ்யூ எடுத்து மூன்றாம் நடுவரிடம் மேல் முறையீடு செய்தனர்.