பும்ரா இல்லாதது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை குறைத்துள்ளது - ரவி சாஸ்திரி!
ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது இந்தியாவின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்புகளை 30% முதல் 35% சதவீதம் குறைத்துள்ளதாக இந்திய அணியின் முன்னால் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
Trending
இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவர் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் வலுக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஒருவேளை சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாத பட்சத்தில் இந்தியா அணியை கணிசமாக பலவீனப்படுத்தக்கூடும் என்றும், அவர்களின் வெற்றி வாய்ப்புகளை கிட்டத்தட்ட 30-35% குறைக்கும் என்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ஆகியோர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய அவர்கள், “இது மிகப்பெரும் ரிஸ்க்னு நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக இந்தியா அணி மிகப்பெரும் ஐசிசி தொடரில் விளையாடும் சமயத்தில் இதுபோல் பும்ரா முழு உடற்தகுதியை எட்டாதது நிச்சயம் பெரும் பின்னடைவுதான். ஏனெனில் அவரது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ஒரு ஆட்டத்திற்கு திடீரென அழைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படும்படி கேட்கப்படும் அளவுக்கு அவர் மிகவும் விலைமதிப்பற்றவர் என்று நான் நினைக்கிறேன்.
எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கும். அவர் உடனடியாக வந்து தனது பந்துவீச்சாள் சாதனை படைப்பார் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் காயத்திலிருந்து மீண்டு வரும்போது அது ஒருபோதும் அவ்வளவு எளிதானது அல்ல. ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது இந்தியாவின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்புகளை 30% முதல் 35% சதவீதம் குறைத்துள்ளது. ஒருவேளை அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் நிலைமை மாறும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது காயமடைந்த பும்ரா, அதன்பின் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுத்தொடங்கியுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now