
இந்தியாவில் நடைபெற்று வரும் அண்டர்23 மாநில கோப்பை தொடருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் உத்தர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் இரட்டை சதமடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் உத்திர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் என தனது இரட்டை சத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். மேலும் அவர் இரட்டை சதத்தைப் பதிவுசெய்ய இந்த இன்னிங்ஸில் வெறும் 97 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதன்மூலம் உத்திர பிரதேச அணி 405 ரன்களை குவித்ததுடன் 152 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றும் அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் சமீர் ரிஸ்வி 97 பந்துகளில் இரட்டை சதத்தை பதிவுசெய்து அசத்தியதன் மூலம், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார். முன்னதாக நியூசிலாந்து வீரர் சாத் பௌஸ் முதல்தர கிரிக்கெட்டில் 103 பந்துகளில் இரட்டை சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது சமீர் ரிஸ்வி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.