
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக சதத்தை பூர்த்தி செய்த சூர்யவன்ஷி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ரன்கள் ஏதுமின்றி இரண்டாவது பந்திலேயே தனது விக்கெட்டை இழந்திருந்தார். இதனால் இப்போட்டியில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.