
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுபவர் வருண் ஆரோன். இவர் இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாகி 9 டெஸ்ட், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது 34 வயதாகும் வருண் ஆரோன் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியுடன் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக வருண் அரோன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். வேகப்பந்து வீச்சால் எனக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டன. இப்போது சிகப்பு-பந்து கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சின் தேவைகளை என் உடலால் பூர்த்தி செய்ய முடியாது, அதனால் நான் அதை விட்டு விலக முடிவு செய்துள்ளேன்.