
Varun Chakravarthy Dream T20 Team: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது கனவு டி20 அணியைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர் தனது அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் பெயர்கள் சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளவர் வருண் சக்ரவர்த்தி. இவர் இதுவரை இந்திய அணிக்காக 18 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளையும், 4 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுடனான யூடியூப் உரையாடலின் போது வருண் சக்ரவர்த்தி தனது கனவு டி20 அணியை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி அவர் தனது அணியின் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டை தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் வரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவையும், 4ஆவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரனையும், 5ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசனையும் தேர்வு செய்துள்ளார்.