
T20I Bowling Rankings:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் முன்னேற்றும் கண்டுள்ளனர்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், சர்வ்தேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும் நீடிக்கும் நிலையில், மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் ஒரு இடம் முன்னேறி 5ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 14 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தையும், இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 48 இடங்கள் முன்னேறி 16ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் ரோவ்மன் பாவெல் 8 இடங்கள் முன்னேறி 20ஆவது இடத்தையும், இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 38ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.