
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய வீரர் விராட் கோலி இத்தொடரில் 2 சதங்கள் உள்பட 540 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சவாலான பிட்ச்சில் 101 ரன்கள் குவித்த அவர் உலகக் கோப்பை வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தார். மேலும் அந்தப் போட்டியில் நேரம் செல்ல பிட்ச் மெதுவான காரணத்தால் கடைசி நேரத்தில் அவர் சற்று மெதுவாக விளையாடி சத்தத்தை தொட்டார்.
ஆனால் அதை புரிந்து கொள்ளாத சிலர் சொந்த சாதனைக்காக சதமடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி மிகவும் சுயநலத்துடன் விளையாடியதாக விமர்சித்தனர். குறிப்பாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி சுயநல எண்ணத்துடன் விளையாடியதாக வெளிப்படையாகவே ட்விட்டரில் விமர்சித்தார்.