
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஏற்கெனவே இந்திய வீரர்கள் சென்று விளையாடி வரும் நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரும் இணைந்துள்ளார். அதன்படி, நடப்பு சீசன் கவுண்டி கிரிக்கெட் தொடரில் லங்கஷர் அணிக்காக விளையாடி வரும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை தேர்வு செய்துள்ளார். அந்தவகையில் லங்கஷைர் அணிக்கா அளித்த ஒரு பேட்டியின் போது, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரில் பிடித்தமான வீரர் யார் என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள வெங்கடேஷ் ஐயர், இந்த மூன்று சிறந்த வீரர்களில் மகேந்திர சிங் தோனியை தனது தேர்வு என்று அழைத்து அவரை நம்பர்-1 ஆக தேர்வு செய்துள்ளார்.
அதன்பின் மூன்று வீரர்களில் இருவரை தேர்வு செய்ய வேண்டுமானால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கெள்விக்கு பதிலளித்த வெங்கடேஷ் ஐயர், மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரை எனக்கு பிடித்தமான இரண்டு வீரர்களாக நான் தேர்வுசெய்வேன் என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் விராட் கோலியைக் கட்டிலும், தோனி மற்றும் சச்சினுக்கு தனது முன்னுரிமையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.