
இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் ஹரியானா மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹரியான அணியில் தொடக்க வீரர் அர்ஷ் ரங்கா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஹிமான்ஷு ரானா மற்றும் கேப்டன் அங்கித் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கித் குமார் 48 ரன்களிலும், ஹிமான்ஷு ரானா 44 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய நிஷாந்த் சிந்து 10 ரன்களுக்கும், பார்த் வட்ஸ் 8 ரன்களுக்கும், தினேஷ் பானா 20 ரன்னிலும், ராகுல் திவேத்தியா 22 ரன்னிலும், சுமித் குமார் 21 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த அனுஜ் 23 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் ஹரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களைச் சேர்த்தது. கர்நாடகா அணி தரப்பில் அபிலேஷ் ஷெட்டி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகா அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழகக், அடுத்து களமிறங்கிய அனீஷ் கேவியும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் மற்றும் ஸ்மாறன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.