
நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற க்ரூப் டி பிரிவுக்கான லீக் போட்டியில் விதர்பா மற்றும் உத்திர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணிக்கு அபிஷேக் கோஸ்வாமி மற்றும் ஆர்யன் ஜூரல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கோஸ்வாமி 32 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்யன் ஜூரெலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மாதவ் கௌசிம் மற்றும் சமீர் ரிஸ்வி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மாதவ் கௌசிக் 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிங்கு சிங்கும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சமீர் ரிஸ்வி தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்த சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரியம் கார்க் 34 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் மாவி 33 ரன்களையும் சேர்த்து அணியை கரைசேர்த்தனர். இதன்மூலம் உத்திர பிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 307 ரன்களைக் குவித்தது. விதர்பா அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நச்சிகேத் பஹ்தே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய விதர்பா அணிக்கு துருவ் ஷோரே - யாஷ் ரத்தோட் இணை அதிரடியாக தொடங்கினர்.