
ஐசிசி ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இது விராட் கோலியின் சொந்த மைதானம் என்பதால் இப்போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்பும் இருந்தது.
அதற்கேற்ப ரசிகர்களும் விராட் கோலிக்கு உற்சாகத்தை கொடுத்துக் கொண்டே இருந்தனர். கேமரா மேனும் அடிக்கடி டெல்லியில் மைதானத்தில் விராட் கோலியின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக வைக்கப்பட்டிருக்கும் விராட் கோலி பெயர் வைக்கப்பட்டிருக்கும் பெவிலியன் பகுதியை அடிக்கடி காண்பித்துக் கொண்டே இருந்தனர். இதனால் வழக்கத்துக்கும் மாறாக கொஞ்சம் கூடுதலாகவே மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடி துருதுருவென இருந்தார் விராட் கோலி.
குறிப்பாக ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் பேட்டிங்கிற்காக மைதானத்திற்கு வந்தபோது விராட் கோலி என்ற ரசிகர்களின் முழக்கம் விண்ணைப் பிளந்தது. இதில் முகம் மாறிப் போனார் நவீன் உல் ஹக். அவரால் இயல்பாக முதல் இரண்டு பந்துகள் விளையாடவே முடியவில்லை. அதன்பின்னர் ஒரு பந்தை நவீன் உல் ஹக் அடிக்க, அந்த பந்தும் ஸ்ரெய்டில் நின்று கொண்டிருந்த கோலியிடமே சென்றது.
Finally Naveen ul haq bow down to Goat Virat Kohli #INDvsAFG pic.twitter.com/AEBFCJ0POX
— (@imGurjar_) October 11, 2023