
WI vs IND: சாதனையை நோக்கி விராட் கோலி, ரோஹித் சர்மா! (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று பார்போடாஸில் தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் விராட் கோலி 102 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒரு நாள் போட்டிகளில் அவர் 13,000 ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவுள்ள கோலி, 57.32 சராசரியுடன் 46 சதங்கள், 65 அரைசதங்களை அடித்து 12,898 ரன்களைச் சேர்த்துள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககரா மற்று ரிக்கி பண்டிங் ஆகியோர் 13,000 ரன்களை கடந்துள்ளனர்.