
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா நகரில் கோலாலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கலையும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 27.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஜடேஜா 5 விக்கெட்களையும், ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் கடந்த மூன்று போட்டிகளாகவே மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறோம். சூழலுக்கு ஏற்றவாறு எங்களை தகவமைத்து விளையாடுவதாக கருதுகிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்திருந்தாலும் தேவையான ரன் குவிப்பை வழங்கினோம்.