1-mdl.jpg)
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்களையும், அலெக்ஸ் கேரி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இந்திய அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கின் மூலம் சாதனை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரின் கேட்ச்சுகளை விராட் கோலி பிடித்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பீல்டராக, இந்தியாவுக்காக அதிக கேட்சுகள் எடுத்ததன் அடிப்படையில் கோலி முதல் இடத்தை எட்டியுள்ளார்.