சச்சின், சங்கக்கார சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியின் மூலம் வீரர் விராட் கோலி முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார ஆகியோரியன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சச்சின், சங்கக்கார சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி! (Image Source: Google)
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 96 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், அந்த அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1750 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் விராட் கோலி 32 போட்டிகளில் 1656 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்காரவை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு
சர்வதேச அளவில், சச்சின் டெண்டுல்கருக்கு (463 போட்டிகளில் 18426 ரன்கள்) அடுத்து, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார (404 போட்டிகளில் 14234 ரன்கள்) உள்ளார். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விராட் கோலி 55 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைப்பார். தற்போது விராட் கோலி 301 ஒருநாள் போட்டிகளில் 14,180 ரன்களைக் குவித்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricketசாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News