Advertisement

ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையில் முதல் இந்தியர்!

இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்ஸ் கடந்த இந்திய வீரர் என்பதோடு முதல் இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றிருக்கிறார். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 08, 2022 • 16:01 PM
Virat Kohli completes 200M followers on his Instagram account
Virat Kohli completes 200M followers on his Instagram account (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் மறுக்கமுடியாத, மறக்கமுடியாத வீரர்களில் ஒருவராக இருப்பவர் விராட் கோலி. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு என்பதில் மிகையில்லை.

களத்தில் கோலி அரை சதம் அடித்தாலே அது கட்டாயம் 100 ரன்களை தாண்டும் என்றளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கொடுப்பவர் விராட். இதனாலேயே அவரை ரன் மிஷின் என அழைப்பர்.

Trending


மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் அது தொடர்ந்திருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்தியாவிலேயே அதிகளவிலான ஃபாலோவர்ஸ்களை கொண்ட முதல் இந்திய வீரர் என்ற நிலையின் மற்றொரு மைல் கல்லை விராட் எட்டியிருக்கிறார்.

அதன்படி, இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்ஸ் கடந்த இந்திய வீரர் என்பதோடு முதல் இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றிருக்கிறார். அதனை குறிப்பிடும் வகையில் தனது பதிவுகள் கொண்ட வீடியோவை வெளியிட்டு தனது ஃபாலோவர்ஸுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் கோலி.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் உலகளவில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.

முதல் இரண்டு இடத்தில் கால்பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டார்களான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனல் மெஸ்ஸியும் 451 மில்லியன், 334 மில்லியன் முறையே ஃபாலோவர்ஸ்களை பெற்று முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். தற்போது இந்த பட்டியலில்தான் கோலி 3வதாக இணைந்துள்ளார். இது அவரது ரசிகர்களை பெருமளவில் மகிழ்ச்சிய அளித்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கோலி 2021 டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு அதிலிருந்து விலகினார். பின்னர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து பிசிசிஐ விராட்டை விலக்கியதை அடுத்து டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் அணியான ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.

இந்த நிலையில், இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement