சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
சச்சினின் சாதனையை முறியடிக்க எல்லா வாய்ப்புகளும் விராட் கோலிக்கு உள்ளன என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி மற்றும் கே.எல். ராகுல் அற்புதமாக விளையாடி வெற்றி பெற வைத்தனர்.
Trending
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரிலேயே ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “விராட் கோலி செய்வார் என்று நினைக்கிறேன். அவர் நிச்சயமாக 2 சதங்கள் அடிப்பார். அவர் 3 சதங்கள் அடிப்பாரா என்பது வேறு விஷயம். ஆனால், இந்தியாவில் உள்ள மைதானங்கள், விக்கெட்டுகள் மற்றும் அதிக ரன்களை எடுப்பதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. யாருக்கு தெரியும், இது அவரது கடைசி உலகக்கோப்பையாக கூட இருக்கலாம். அவர் ஒரு வெற்றியாளர், அவர் தனக்கும் தனது அணிக்கும் வெற்றியை விரும்புகிறார். சச்சினின் சாதனையை முறியடிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன” என்று கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் சச்சின் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 47 சதங்களுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now