
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கரம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார்.