
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விரட் கோலி முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அந்தவகையில், ஆஸ்திரேலிய அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் பார்டர்-கவாஸ்கர் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் போட்டியில் விராட் கோலி மேற்கொண்டு ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் அதிக சதமடித்த வீரர் எனும் சாதனையை அவர் தன்வசப்படுத்துவார்.