
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீப காலமாகவே விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. மேலும் அவர் நிதனமாக விளையாடுவதாகவும், அதனால் அவர் விளையாடும் அணி பின்னடவை சந்திப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.