
நடப்பாண்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்தார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளை விட இந்தாண்டு ஒப்பிடும் போது, விராட் கோலி மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. 2023இல் மட்டும் விராட் கோலி 2048 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலம் 7ஆவது முறையாக ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற புதிய வரலாற்றை உருவாக்கினார். ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் சராசரி 72.47ஆகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 55.91ஆகவும், டி20 கிரிக்கெட்டில் 53.60ஆகவும் உள்ளது.
இதன்மூலம் நடப்பாண்டில் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரராகவும் விராட் கோலி சாதித்துள்ளது. இவருக்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் ஆசாம் 62.47 சராசரியுடன் 1,312 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 61.94 என்ற சராசரியுடன் 1,115 ரன்காளை எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.