
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது. இதன்மூலம் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருப்பதற்கான முனைப்பில் களமிறங்குகிறது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு அணிக்கும் இடையிலான போட்டி மைதானத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கிட்டத்தட்ட ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதனால் ஆட்டத்தில் வெற்றிபெறுவதில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். அதேபோல் இந்திய அணியில் பும்ரா மீண்டும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.