
வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்க அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
இத்தொடரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்த இந்தியா சட்டோகிராமில் நடந்த கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் விலகிய நிலையில், கேஎல் ராகுல் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் – விராட் கோலி சிறப்பான ஜோடியை அமைத்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடியின் அதிரடியால் இந்திய அணி வங்கதேசத்திற்கு 410 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அதைத் துரத்திய வங்கதேசம் 184 ரன்னில் சுருண்டது. தற்போது இதே உத்வேகத்துடன் டெஸ்ட் போட்டியிலும் களமாட தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள் இந்திய வீரர்கள்.