Advertisement
Advertisement
Advertisement

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1000 பவுண்டரிகளை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார்.

Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 01, 2024 • 10:37 PM

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 01, 2024 • 10:37 PM

அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Trending

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியதுடன் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சதம் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். இந்நிலையில், இந்த இன்னிங்ஸின் போது விராட் கோலி நான்கு பவுண்டரிகளை அடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றையும் எட்டியுள்ளார். 

அதன்படி இந்த இன்னிங்ஸில் விராட் கோலி 4 பவுண்டரிகள் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 1000 பவுண்டரிகளை பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டும் 6ஆவது இந்திய வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். முன்னதாக முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமணன், சுனில் கவாஸ்கர் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு சர்வதேச அளவில் இந்த மைல் கல்லை எட்டும் 26ஆவது வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2058க்கும் அதிகமான பவுண்டரிகளை விளாசி முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 1654 பவுண்டரிகளை விளாசி இரண்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டிஸின் பிரையன் லாரா 1559 பவுண்டரிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement