
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 21 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி இந்த போட்டியில் 54 ரன்களைச் சேர்த்தன் மூலம் சாதனையை படைத்திருக்கிறார். அதாவது சொந்த மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். பாண்டிங் 5,406 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி அதனை முறியடித்து தற்போது இரண்டாவது இடத்திற்கு முந்தியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்களுடன் உள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் எப்படி வெற்றிகரமாக இருக்கிறார் என்பது குறித்து ரவி சாஸ்திரியும் கவாஸ்கரும் பேசினர். இதில் முதலில் பேசிய கவாஸ்கர் விராட் கோலி சேசிங் மாஸ்டர் என்று பாராட்டியுள்ளார். விராட் கோலிக்கு எப்போது அடித்து ஆட வேண்டும்? எப்போது மெதுவாக விளையாட வேண்டும் என்பது குறித்து நன்றாக தெரியும் என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.