
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 352/7 ரன்கள் குவித்து அசத்தியது.
அந்த அணிக்கு டேவிட் வார்னர் 56, மிட்சேல் மார்ஷ் 96, ஸ்டீவ் ஸ்மித் 74, மார்னஸ் லபுஷாக்ன 72 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அலெக்ஸ் கேரி 11, மேக்ஸ்வெல் 5, கேமரூன் கிரீன் 9 ரன்களில் அவுட்டாக்கி 400 ரன்களை ரன்களை தொடவிடாமல் செய்த இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்களும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
முன்னதாக இந்த போட்டி நடைபெற்ற ராஜ்கோட் மைதானத்தில் மதிய நேரத்தில் அதிகப்படியான வெப்பம் இருந்ததால் 28 ஓவர்களிலேயே வீரர்களுக்கு தண்ணீர் இடைவெளி விடப்பட்டது. அப்போது அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாத நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய அணி வீரர்களை நாற்காலி எடுத்து வரச் சொல்லி அதில் உட்கார்ந்து சில நிமிடங்கள் ஓய்வெடுத்தார்.