
இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் தொடரை 2-0 என இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்றுவிட்டதால் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு கில்லும் கோலியும் இணைந்து 131 ரன்களை குவித்தனர். சதமடித்த கில் 97 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோலியும் சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 46ஆவது சதத்தை விளாசி சாதனை படைத்தார் கோலி. இந்த தொடரில் 2ஆவது சதத்தை அடித்து கோலி அசத்தினார். அதைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி கோலி 150 ரன்களைக் கடக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 390 ரன்களைச் சேர்த்தது.