
Virat Kohli Instagram Story About Ms Dhoni Sets Internet On Fire! (Image Source: Google)
கோலி - தோனி இடையேயான நட்பை பற்றி இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். தோனியின் கடின காலத்தில் கோலியும், கோலியின் கடின காலங்களில் தோனியும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக வருவதை நாம் சமீப காலங்களில் பார்த்திருப்போம். இது தொடர்பாக இருவரும் நேர்காணல்களிலும் பகிர்ந்துள்ளனர்.
அதேபோல், தோனியின் தீவிர ரசிகராகவே விராட் கோலி வலம் வருவதையும் கவனிக்கலாம். அந்த வகையில், கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி படம் இடம்பெற்றுள்ள தண்ணீர் பாட்டிலின் படத்தை குறிப்பிட்டு, “அவர் எங்கும் எங்கு இருக்கிறார். தண்ணீர் பாட்டிலிலும் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். கோலியின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Virat Kohli & MS Dhoni #CricketTwitter #IndianCricket #MSDhoni #ViratKohli pic.twitter.com/DFcBCJytLM
— CRICKETNMORE (@cricketnmore) November 21, 2022