
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் அசத்தி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 வெற்றிகள் பதிவு செய்துள்ளது. இத்தொடரில் பேட்டிங் துறையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2-3 என இந்தியா சரிந்து தடுமாறிய போது மீண்டும் அழுத்தமான சூழ்நிலையில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 85 ரன்கள் குவித்து ராகுலுடன் இணைந்து வெற்றி பெற வைத்தார். அதனால் இதுவரை 47 சதங்கள் அடித்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையிலே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49) உலக சாதனையை சமன் செய்வார் அல்லது முறியடிப்பார் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியிருந்தார்.
மேலும் ஏற்கனவே சச்சினை மிஞ்சி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்பது போன்ற நிறைய சாதனைகளை விராட் கோலி படைத்து வருகிறார். ஆனாலும் மிகவும் கடினமான விதிமுறைகளை கொண்ட 90-களில் இப்போது விட தரமான தரமான பவுலர்களை எதிர்கொண்ட சச்சின் தான் விராட் கோலியை விட சிறந்தவர் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.