
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளில் 5லும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் அரையிறுதி சுற்றில் ஒரு காலை இந்திய அணி வைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதற்கு இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோரின் அபார பேட்டிங் ஃபார்ம் முக்கிய காரணமாகும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடினமான போட்டியில், இலக்கை துரத்துவதற்கு தன்னுடைய வழக்கமான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு எல்லாமே ஏறுமுகத்தில் இருக்கிறது.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 354 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவருடன் இணைந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் விராட் கோலி பற்றி மனம் திறந்து பாராட்டி பேசி இருக்கிறார்.