
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏறக்குறைய எல்லா அணிகளும் தங்களின் மூன்று போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. இந்த நிலையில் நாளை இந்திய அணி தன்னுடைய நான்காவது போட்டியில் மகாராஷ்டிரா புனே மைதானத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. மேலும் வங்கதேச அணி இந்திய சூழ்நிலையில் சரியாக செயல்படுவதற்கான வீரர்களைக் கொண்டு இருக்கிறது. எனவே இந்திய அணி எச்சரிக்கையுடன் களமிறங்கும்.
தற்பொழுது 3 ஆட்டங்கள் மொத்தமாக எல்லா அணிகளுக்கும் முடிந்திருக்கும் வேளையில், ஐசிசி ஃபீல்டிங்கில் தாக்கம் தந்த வீரர்கள் என்ற முதல் பத்து வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் உலகத்தின் மிகச் சிறந்த பீல்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா பெயர் இல்லை.