இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் ராஜா விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ள விராட் கோலியின் சாதனைகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம்.
அனைத்து நல்ல விசயங்களுக்கும் ஒரு முடிவு இருக்கும், அது போல் விராட் கோலி தனது கேப்டன் பதவியை முழுமையாக ராஜினாமா செய்துள்ளார்.
இனி விராட் கோலி ஒரு சாதாரண வீரராக தான் அணியில் தொடர்வார். ஆனால் விராட் கோலி செய்த சாதனையை வேறு யாராலும் அவ்வளவு எளிதில் தொட்டுவிட முடியாது.
Trending
அகல பாதாளத்தில் இருந்த டெஸ்ட் அணியை, உச்சத்துக்கு கொண்ட சென்ற முழு பெருமையும் கிங் கோலிக்கு தான் சேரும். விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது , இந்தியா தரவரிசையில் இருந்த இடம் 7. ஆனால் தற்போது அவர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள இன்று, இந்தியா தரவரிசையில் உள்ள இடம் ஒன்று.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற எந்த டெஸ்ட் தொடரையும் இழந்ததே இல்லை. 11 தொடரில் சொந்த மண்ணில் கேப்டனாக இருந்த கோலி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதே போல் விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து( முன்னிலை) மண்ணில் வென்றுள்ளது. இதே போன்று இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக வெற்றிகளை பெற்றுள்ள கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இதுவரை 68 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கோலி, 40 போட்டிகளில் வெற்றி, 11 போட்டிகளில் டிரா, 17 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளார்.
இப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் தோனி 27 வெற்றிகளுடனும், கங்கலி 21 வெற்றிகளுடனும் உள்ளனர். சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ள 4ஆவது கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலி 5864 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் அணியில் கேப்டனாக 7 இரட்டை சதம், 20 சதம், 18 அரைசதம், 7 ஆட்டநாயகன் விருது, 3 தொடர் நாயகன் விருதை கேப்டன் கோலி வென்றுள்ளளார்.
டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி மொத்தமாக 18 தொடர்களில் வென்றுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என ஒட்டு மொத்தமாக கோலி கேப்டனாக இந்தியாவுக்கு 213 போட்டிகளில் பொறுப்பேற்று 135 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் கேப்டனாக 12 ஆயிரத்து 883 ரன்கள் அடித்துள்ளார். அதிலும் கேப்டனாக மட்டும் 41 சதம் விளாசியுள்ளார் விராட் கோலி. இந்திய அணியின் கேப்டனாக பல உயரங்களை தொட்டுள்ள விராட் கோலியின் ராஜினாமா முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now