கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த விராட் கோலி!
இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 25 வருடங்களில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட்டராக சாதனை படைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்தும், முறியடித்தும் வரும் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடி 26,532 ரன்களை 54.36 என்ற அபாரமான சராசரியில் குவித்து 80 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.
அதே போல ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார். அதனால் இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்களுடைய உலவியில் கடந்த 25 வருடங்களில் அதிகமாக மக்களால் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் பற்றி கூகுள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Trending
அந்த அறிவிப்பின் படி இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 25 வருடங்களில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட்டராக சாதனை படைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த 25 வருடத்தில் எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், முரளிதரன், வார்னே போன்ற உலகின் மற்ற வீரர்களை காட்டிலும் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட வீரராக சாதனை படைத்துள்ளது விராட் கோலியின் கேரியரில் மற்றுமொரு பெருமையாக பார்க்கப்படுகிறது.
அதே போல அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட கால்பந்தாட்ட வீரராக போர்ச்சுக்கலை சேர்ந்த ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அர்ஜென்டினாவின் மெஸ்ஸியை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டை அசால்டாக பின்னுக்கு தள்ளி கால்பந்து உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு போட்டியாக இருப்பதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now