Advertisement

ஐந்து ஆண்டுகள் அவர் தலைமையில் விளையாடியது மறக்க முடியாத ஒன்று - ரோஹித் சர்மா!

தனக்கு முன்னால் அந்த பணியை கவனித்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து தற்போது ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

Advertisement
Virat Kohli led from the front for five years, enjoyed each and every moment under him: Rohit Sharma
Virat Kohli led from the front for five years, enjoyed each and every moment under him: Rohit Sharma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 13, 2021 • 12:56 PM

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக அதிரடி தொடக்க வீரரான ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து முழுநேர கேப்டனாக இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்த உள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 13, 2021 • 12:56 PM

டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று எண்ணியே பிசிசிஐ அவருக்கு இந்த கேப்டன் பதவியை வழங்கியுள்ளது.

Trending

இந்நிலையில் தனக்கு முன்னால் அந்த பணியை கவனித்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து தற்போது ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “மிகவும் துணிச்சலுடனும், உறுதியுடனும் இந்திய அணியை வழிநடத்திச் சென்றவர் விராட் கோலி. இந்திய அணியின் கேப்டனாக எப்போதும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார். இந்திய அணியை கேப்டனாக அவர் வழிநடத்திய இந்த 5 ஆண்டுகளும் அவருடன் ஒரு வீரராக நான் விளையாடியது மறக்க முடியாதது. 

ஒவ்வொரு முறையும் அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உறுதியும், அர்ப்பணிப்பும் அவரிடம் இருந்து களத்தில் வெளிப்படும். ஒட்டுமொத்தமாக அவரது தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. அதேபோன்று நானும் அவரும் இணைந்து விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து உள்ளேன். 

அவருடனான இந்த தொடர்பு இனியும் தொடரும் இந்திய அணிக்காக நாங்கள் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

வரும் 26 ஆம் தேதி தொடங்க இருக்கும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கு பின்னர் நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கான அணி வீரர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement