
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரி்க்கா ஆகிய அணிகளில் டெஸ்ட் மற்றும் டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேப்டனாக இருப்பவர் அனைத்துப் பிரிவுகளையும் சமாளிப்பதும், சரியான கலவையில் அணியைத் தேர்வு செய்வதும் பலநேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்த முறை கொண்டு வரப்பட்டது.
கடந்த 2007ஆம் ஆண்டுவரை இந்த முறைதான் இந்திய அணியிலும் இருந்தது. டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தோனி கேப்டன் பதவியைத் துறந்தபின், அனைத்து பிரிவுகளுக்கும் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டாலும் சிறிதுகூட தனது பேட்டிங்கில் தொய்வில்லாமல் பல நேரங்களில் அணிக்கு வெற்றி தேடித்தந்து, பொறுப்புள்ள கேப்டனாக இருந்துள்ளார்.