
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு நடப்பு உலகக் கோப்பை தொடர் சிறப்பான ஒன்றாக அமையவில்லை. அதே சமயத்தில் சராசரியாகவும் அமையவில்லை. சராசரிக்கும் கீழாக சென்று இருக்கிறது. அவர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அரையிறுதி வாய்ப்பைத் தவற விட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று இந்தத் தொடரில் வலிமையாக இருக்கும் இந்திய அணிக்கு எதிராக லக்னோ மைதானத்தில் அவர்கள் விளையாட இருப்பது புதிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு உண்டாக்கி இருக்கிறது. நடப்பு உலக கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணியை அறிவிக்கும் பொழுது, அவர்கள் விளையாடும் அணியில் 11 பேரும் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள், இவர்களை எப்படி வெல்வது என்று ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேலும் டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல ஆட கூடியவர்கள். அப்பொழுது ஒருநாள் போட்டியை எப்படி விளையாடுவார்கள்? இந்த முறை ஒருநாள் கிரிக்கெட்டில் 500 ரன்கள் எட்டிய முதல் அணியாக மாறுவார்களா? என்று அவர்களது அதிரடி ஆட்டம் முறையின் மேல் சுவாரசியம் கூடியிருந்தது.