1-mdl.jpg)
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 06ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இத்தொடரில் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14000 ரன்களை பூர்த்தி செய்வதுடன், கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கவுள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 350ஆவது இன்னிங்ஸில் 14000 ரன்களை எடுத்ததே இதுநாள் வரை சாதனையாக உள்ளது. அதேசமயம் விராட் கோலி இதுவரை 283 இன்னிங்களில் 58.18 என்ற சராசரிவுடன், 93.54 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 13,906 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 50 சதங்கள் மற்றும் 72 அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.