
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி சென்னையில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை களமிறங்கினர்.
இந்தியா சார்பில் முதல் ஓவரை வீசினார் பும்ரா. முதல் ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 1 ரன் கிடைத்தது. இரண்டாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் நான்கு ரன்கள் கிடைத்தது. மூன்றாவது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை சந்தித்த மிட்செல் மார்ஷ் பந்தை எட்ஜ் செய்தார்.
ஸ்லிப்பில் பீல்டிங் நின்று இருந்த விராட் கோலி ஒரு விநாடி கூட யோசிக்காமல் பாய்ந்து, டைவ் அடித்து பந்தை பிடித்தார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் 15 கேட்சுகள் பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.