
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது.
அதன்பின் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
27,000 சர்வதேச ரன்கள்