Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!

எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 24, 2024 • 10:42 AM

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 24, 2024 • 10:42 AM

இப்போட்டியில்  இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுளது.

Trending

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக தற்சமயம் இவ்விரு அணிகளும் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பான சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

27000 சர்வதேச ரன்கள்

இந்த போட்டியில் விராட் கோலி 35 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை நிறைவு செய்வார். இதுவரை, 534 போட்டிகளில் 593 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 26,965 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் சர்வதேச அளவில் 27,000 ரன்களை  அதிவேகமாக கடந்த வீரர் எனும் சாதனையைப் படைப்பார்.  மேற்கொண்டு இந்த மைல் கல்லை எட்டும் நான்காவது சர்வதேச கிரிக்கெட் வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். 

9000 டெஸ்ட் ரன்கள்

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை எடுக்க மேலும் 129 ரன்கள் தேவை. இதுவரை 114 டெஸ்டில் 193 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரை 8,871 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 29 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில் இப்போட்டியில் அவர் 9000 ரன்களை கடக்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டிய 4ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன்பு இந்திய அணிக்காக இதுவரை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோரால் மட்டுமே இந்த மைல்கல்லை எட்ட முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

30 டெஸ்ட் சதங்கள்

கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 29 சதங்களை அடித்துள்ளார். இந்த தொடரில் அவர் மேற்கொண்டு ஒரு சதம் அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மேத்யூ ஹைடன் மற்றும் ஷிவ்நாராயண் சந்தர்பால் ஆகியோருடன் இணைந்து 15ஆவது இடத்தை அடைவார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த் , துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement