
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பான சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, அதன்பின் தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விராட் கோலி படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
27000 சர்வதேச ரன்கள்