-(1)-mdl.jpg)
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ராஸ் டெய்லர் சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வினை அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜென்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை குறித்தும், விராட் கோலி குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும்போது விராட் கோலியுடன் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன். அவருடன் இருந்த அனுபவங்களை மிகவும் ரசித்தேன். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி ஃபார்மிற்கு திரும்பி உள்ளார். அவரது இந்த ஆட்டம் இந்திய அணிக்கு நிச்சயம் பலத்தை சேர்க்கும்.
இனிவரும் ஆண்டுகளிலும் அவர் நிறைய சதங்களை அடிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். எதிர்வரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இன்னும் பல திறமையான வீரர்களின் பெயர்கள் வெளிப்படும் என்று நான் நினைக்கிறேன். கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பதும், அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருப்பதும் இந்திய அணிக்கு சாதகமான ஒன்று.