அவர் அடிக்க ஆரம்பித்து விட்டால் எந்த பவுலராலும் தடுக்க முடியாது - விராட் கோலி புகழாரம்
ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில

ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Trending
பின்னர் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ”இந்த போட்டியில் நாங்கள் 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும் 200 ரன்கள் அடிப்பது என்பது எல்லாம் அசாத்தியமான ஒரு சாதனை. மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். குறிப்பாக மேக்ஸ்வெல் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதுபோன்ற ஒரு வீரரை தான் நாங்கள் அணிக்காக தேடிக்கொண்டிருந்தோம்.
அதுமட்டுமின்றி டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது என்பது எந்த பவுலராலும் முடியாத காரியம். அந்த வகையில் இறுதி நேரத்தில் டிவில்லியர்ஸ் தனது அதிரடி வெளிப்படுத்தி இந்த மைதானத்தில் 40 ரன்கள் வரை கூடுதலாக எடுக்க வைத்தார். இவர்கள் இருவரது ஆட்டமே இந்த வெற்றிக்கு காரணம். டிவில்லியர்ஸ் பந்தை அடிக்க ஆரம்பித்து விட்டால் அவரை நிறுத்த முடியாது" என்று அவர் தெரிவித்தார்
Win Big, Make Your Cricket Tales Now