தங்கப்பதக்கத்தை வென்ற விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வழங்கிய கௌரவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 199 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களம்றங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - கேஎல் ராகுல் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 41.2 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Trending
இந்நிலையில் நேற்றியை போட்டியில் ஆஸ்திரேலிய அண்யின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 3ஆவது ஓவரின் 2ஆவது பந்தை மார்ஷ் அடித்தபோது, பந்தில் ஸ்லிப் திசையில் சீறிச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலி டைவ் அடித்து பிடித்தார். மேலும் ஒரு கேட்ச் பிடித்தார்.
Virat Kohli awarded a medal for being the Best fielder by the Indian team management! #Cricket #WorldCup2023 #CWC23 #ViratKohli pic.twitter.com/BCgsjGuAPy
— CRICKETNMORE (@cricketnmore) October 9, 2023
போட்டியில் இந்தியாவின் பீல்டிங் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரருக்கு இந்திய அணி சார்பில் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார். அவரை சக வீரர்கள் பாராட்ட, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது போல் விராட் கோலி, போஸ் கொடுத்து அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now