அணியிலிருந்து புறக்கணிக்கப்படுகிறாரா விராட் கோலி; தொடர் ஓய்வு ஏன்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டாக விராட் கோலி படுமோசமாக சொதப்பிவருகிறார்.
கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த கோலி, அதன்பின்னர் இரண்டரை ஆண்டுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஐபிஎல்லிலும் கூட சரியாக ஆடவில்லை.
Trending
டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இளம் வீரர்கள் பலர் அருமையாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டி போட்டுவருகின்றனர். உலக கோப்பை நெருங்கும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.
இளம் வீரர்கள் அபாரமாக விளையாடிவரும் நிலையில், கோலி சரியாக ஆடாவிட்டாலும், அவர் கோலி என்பதற்காக அவரை அணியில் வைத்துக்கொண்டு, நல்ல ஃபார்மில் உள்ள திறமையான இளம் வீரர்களை வெளியில் உட்கார வைக்கப்படுகின்றனர்.
கோலி என்ற அவரது அடையாளத்துக்காக மட்டுமே, ஃபார்மில் இல்லாத கோலியை அணியில் எடுப்பது சரியாக இருக்காது என்று கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் கருத்து கூறியிருந்தனர். அது அணியின் நலனை பாதிக்கும் என்பதால் அப்படி கருத்து கூறியிருந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கூட, 2 போட்டியிலும் சேர்த்தே 12 ரன் மட்டுமே அடித்திருந்தார் கோலி. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி மற்றும் பும்ரா ஆகிய இருவருக்குமே அந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு அளிக்கப்பட்டது வேண்டுமானால் ஓய்வாக இருக்கலாம். ஆனால் கோலிக்கு அளிக்கப்பட்டது ஓய்வு அல்ல. அதை புறக்கணிப்பாகவே பார்க்க முடிகிறது.
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நலனை கருத்தில் கொண்டு, கோலியின் இடத்தை ஃபார்மில் உள்ள ஒரு திறமையான இளம் வீரருக்கு வழங்கலாம் என்பதால், கோலி ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.
தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் என இளம் வீரர்கள் பலர் வரிசைகட்டி நிற்பதால், டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை கடந்து சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. விராட் கோலியின் டி20 கிரிக்கெட் கெரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now