
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 8ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற எந்தவொரு ஐசிசி தொடர்களிலும் கோப்பையை வெல்லாதாது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதனால் நடப்பாண்டு இந்திய அணி கோப்பையை வென்று அந்த ஏக்கத்தையும் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற விராட் கோலி மட்டும் தான் நடப்பு தொடரில் விளையாடுகிறார். இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.