83 படத்தைப் பாராடிய விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘83’ திரைப்படத்திற்கு இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. கபீா்கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங்கும், ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளார்கள்.
1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்டது.
Trending
கடந்த வருடம் வெளியாவதாக இருந்த இப்படம் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெளியான இப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி.
@RanveerOfficial was a different level altogether. Great job everyone! @therealkapildev @kabirkhankk
— Virat Kohli (@imVkohli) December 25, 2021
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விராட் கோலி, “இதைவிடவும் சிறப்பான முறையில் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தருணத்தை மீட்டுக்கொண்டு வர முடியாது. அற்புதமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் 1983 உலகக் கோப்பையின்போது உண்டான உணர்வுகளிலும் நிகழ்வுகளிலும் நம்மை மூழ்கடிக்கிறது. அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். ரன்வீர் சிங் சிறப்பாக நடித்துள்ளார்” எனப் பாராட்டியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now