
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்த்து இந்தியா அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு கடந்த போட்டியை போலவே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷுப்மன் கில் 19 ரன்களில் அவுட்டானார்.
அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 3 ரன்களில் அவுட்டாக்கிய துணித் வெல்லாலகே மறுபுறம் அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி 2 சிக்சருடன் 53 ரன்கள் விளாசிய கேப்டன் ரோஹித் சர்மாவையும் தன்னுடைய மாயாஜால சுழலால் கிளீன் போல்டாக்கினார். இந்நிலையில் 4ஆவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய கேஎல் ராகுலும் அவருடைய சூழலில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதே போல மறுபுறம் போராடிய இஷான் கிஷன் 33 ரன்களில் அவுட்டாக, ஹர்திக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 4 என இதர பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் 49.1 ஓவர்களில் இந்தியா 213 ரன்கள் மட்டுமே ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக துனித் வல்லாலகே 5 விக்கெட்டுகளையும், சரித் அசலங்கா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.